அறிமுக போட்டியில் 51 வருட சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி

Published On:

| By christopher

varun chakaravarthy set record debut

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று (பிப்ரவரி 9) மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. varun chakaravarthy set record debut

இந்த போட்டியின் மூலம் அறிமுகம் ஆன வருண் சக்கரவர்த்தி, இந்திய அணியின் 51 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணி தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 1974 ஆம் ஆண்டு விளையாடியது. அப்போது இந்திய அணியில் அதிக வயதுடைய வீரர்கள் ஒரே நேரத்தில் அறிமுகமாக நேர்ந்தது. ஃபரூக் இன்ஜினியர் 36 வருடம் 138 நாட்களிலும், அஜித் வடேகர் 33 வருடம் 103 நாட்களிலும் அறிமுகமாகினர்.

இந்த நிலையில் இன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆன வருண் சக்கரவர்த்திக்கு வயது 33 வருடம் 164 நாட்களாக உள்ளது. இதன் மூலம் அதிக வயதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை வருண் சக்கரவர்த்தி வசமானது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் தனது முதல் 4 ரன்களை கொடுத்த வருண் சக்கரவர்த்தி, இரண்டாவது ஓவரில் தொடக்கவீரர் பிலிப் சால்ட் விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து அவர் விக்கெட் எடுக்காத நிலையில் பத்து ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share