பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘லப்பர் பந்து’. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகர்களாக நடித்துள்ளனர் . சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடித்துள்ளனர். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் படத்தில் இடம் பெற்றுள்ளனர். தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.
ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
’லப்பர் பந்து’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான ‘டம்மா கோலி’ என்ற பாடல் தற்போது வெளியாகி கேட்பவர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது.
லப்பர் பந்து படம் குறித்து கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, “இந்த படத்தை பார்த்தேன், மிகவும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஊரில் விளையாடும் கிரிக்கெட்டை மையப்படுத்தி அற்புதமாக இந்த படத்தை எடுத்துள்ளனர்.
நானும் லப்பர்பந்து, டென்னிஸ் பந்துகளில் விளையாடிதான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தேன். தமிழ் சினிமாவில் இந்த படம் முக்கிய அங்கம் பெறும். படத்தை பார்க்கும் போது, எனது இளமை காலத்துடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் வருணின் வாழ்த்தை படக்குழு தங்கள் சமூகவலைத் தள பக்கங்களில் பதிவிட்டு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூரம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)