13 வயது சூர்யவன்சி ஐ.பி.எல்லில் ஆட முடியுமா… ஐ.சி.சி. ரூல்ஸ் சொல்வதென்ன?

விளையாட்டு

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரை சேர்ந்த 13 வயது வைபவ் சூர்யவன்சி என்ற இளம் வீரரை 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவிலுள்ள சமாஸ்தீபூர்தான் வைபவின் சொந்த ஊர். இந்த வயதிலேயே இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடித்துள்ளார். 9 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய வைபவ் , இளம் வயதில் 19 வயதுக்குட்பட்ட சர்வதேச போட்டியில் அரை சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர். தற்போது, அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருந்தாலும் ஐபி.எல் தொடரில் 13 வயதில் அவரால் களம் இறங்க முடியுமா?

2020 ஆம் ஆண்டு ஐசிசி வகுத்த விதியின்படி, சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க 15 வயதை எட்டியிருக்க வேண்டும். எனினும், தேசிய அணிகளுக்காக களமிறங்க வேண்டுமென்றால் ஐசிசியிடம் சிறப்பு அனுமதி பெற்று களம் இறக்கலாம். பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசாதான் சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் களமிறங்கிய வீரர் ஆவார். 1996 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் போது அவருக்கு வயது 14 வருடம் 227 நாட்கள்தான் ஆகியிருந்தது. தற்போது, வகுத்துள்ள சட்டத்தின்படி எந்த பார்மட் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் குறைந்தது 15 வயதாகியிருக்க வேண்டுமென்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆனால், ஐ.பி.எல் தொடரில் விளையாட எந்த வயது வரம்பும் இல்லை . எனினும், வைபவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் நேரடியாக 2025 ஆம் ஆண்டு தொடரில் விளையாட வாய்ப்பில்லை. மூத்த வீரர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். மனதளவிலும் உடல் அளவிலும் ஐ.பி.எல் போட்டியில் களமிறங்க தயார் செய்யப்படுவார். இவரை பட்டை தீட்ட ராஜஸ்தான் அணியில் ராகுல் டிராவிட் மற்றும் குமார சங்கக்காரா போன்ற சிறந்த கோச்சுகளும் உள்ளனர். எனவே, வருங்காலத்தில் அந்த அணிக்கு திறமை வாய்ந்த இளம் வீரர் கிடைக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

வார்னருக்கு இந்த நிலையா? 2 கோடினு வச்சும் யாரும் மணி அடிக்கலையே!

கஞ்சா குடிக்கிகளை கேட்க ஆளில்லை… ரயில் நிலையத்தில் எவ்வளவு அட்டூழியம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *