ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 தூதராக உலகின் அதிவேக மனிதரும், ஒலிம்பிக் சாம்பியனுமான உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் ஜூரம் அடித்து வருகிறது. இதனையடுத்து வரும் ஜூன் மாதம் முதல் உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆட்கொள்ளும் வகையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டி குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ தூதராக ஓட்டப்பந்தய ஜாம்பவானான ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 மற்றும் 2016 க்கு இடையில் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கங்களை வென்று ஜமைக்கா நாட்டின் பெயருக்கு புதிய அடையாளத்தை கொடுத்தார்.
மேலும் தனது தடகள விளையாட்டில் 19 கின்னஸ் சாதனைகளை வைத்துள்ள உசைன் போல்ட், 100மீ, 200மீ, மற்றும் 4×100மீ ஓட்டப்பந்தயங்கள் என அனைத்திலும் தனது வேகத்தினால் உலகின் மறுக்கமுடியாத ராஜாவாக இருக்கிறார்.
ஐசிசி டி20 தூதராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்துஅவர் கூறுகையில், “கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் கரீபியன் தீவுகளிலிருந்து வந்ததால், விளையாட்டு எப்போதும் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது” என்று போல்ட் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “உலகக் கோப்பையில் நான் நிச்சயமாக மேற்கிந்திய தீவுகளை ஆதரிப்பேன். விளையாட்டை அமெரிக்காவிற்கு கொண்டு செல்வது கிரிக்கெட்டுக்கு பெரியது. அமெரிக்கா விளையாட்டு மற்றும் அதிக தீவிரத்தில் நிறைய நம்பிக்கை கொண்டுள்ளது” என போல்ட் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Official : குக் வித் கோமாளி போட்டியாளர்கள் அறிமுகம்…!