யுஎஸ் ஓபன் : அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி!
யுஎஸ் ஓபன் (US Open ) டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டி நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.
அதன்படி, இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் நதானியேல் லாம்மன்ஸ் , ஜாக்சன் வித்ரோ ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியானது 28 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
தற்போது இந்த ஜோடி உலக அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. முன்னதாக போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் இணை கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இந்தியாவின் போபண்ணா பாகிஸ்தான் வீரர் ஐசம்-உல்-ஹக் குரேஷியுடன் இணைந்து விளையாடினார் என்பதும் கவனிக்கத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியா – பாரத் : பாஜகவின் நோக்கம் என்ன?: வைகோ