ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானது குறித்து நடிகை ஊர்வசி ரவுதடேலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு பிஎம்டபிள்யூ காரில் பயணித்த ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் ரிஷப் பண்டுக்கு நெற்றியில் வெட்டுக்காயம், வலது முழங்காலில் தசை நார் கிழிந்தது, வலது மணிக்கட்டு,கணுக்கால், கால்விரல் மற்றும் முதுகில் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரிஷப் பண்ட் விபத்து குறித்து மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் ரிஷப் பண்ட் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த பதிவில், வெள்ளை நிற உடையில் ஊர்வசி தனது புகைப்படத்தை பகிர்ந்து, “பிரார்த்திக்கிறேன்” என வெள்ளை நிற இதய எமோஜி, புறா மற்றும் நட்சத்திரங்களுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் #love #UrvashiRautela #UR1 in the post என்ற ஹேஷ்டாக் இடம்பெற்றுள்ளது.
இதனால் கோபமடைந்த ரிஷப் பண்ட் ரசிகர்கள் ஊர்வசி மிகவும் கேவலான மனிதர் என்றும் துயரமான இந்த தருணத்தில் விளம்பரத்திற்காக பதிவு போடுகிறீர்கள் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஊர்வசி மற்றும் பண்ட் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிஷப் பண்ட் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிரிக்கெட் வீரர் RP என்னை சந்திப்பதற்காக ஹோட்டலில் நள்ளிரவு வரை காத்திருந்தார் என ரிஷப் பண்ட் குறித்து மறைமுகமாக ஊர்வசி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
உதயநிதியை அமைச்சராக்கியது ஏன்? : பிடிஆர்
ரிஷப் பண்ட் விபத்து: ஷிகர் தவான் கொடுத்த அட்வைஸ்!