icc world cup final 2023

உலகக் கோப்பை இறுதிப்போட்டி… தடையில்லா மின்சாரம்: TANGEDCO!

தமிழகம் விளையாட்டு

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு இன்று (நவம்பர் 19) தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்தியா பேட்டிங்கிற்கு களமிறங்கியுள்ளது.
மைதானத்தை தாண்டி உலகக் கோப்பை போட்டியை காண்பதற்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் எல்.இ.டி ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பையை முன்னிட்டு தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்காக  அனைவரும் ஒன்றிணைந்து TANGEDCO-வின் தடையில்லா மின்சாரத்துடன் ICC உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 ஐ கண்டு மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

WorldcupFinal2023: டாஸ் வென்றது ஆஸ்திரேலியா… இந்தியா பேட்டிங்!

ஆளுநர் டெல்லி பயணம்: காரணம் இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *