யாரும் எதிர்பாராத விதமாக சென்னை அணி 20 வயது இளம்வீரர் ஒருவரை, ரூபாய் 8.4 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
துபாயில் தற்போது நடைபெற்று வரும் மினி ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி தொடர்ந்து ஆச்சரியங்களை வாரி வழங்கி வருகிறது.
முதலில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூபாய் 1.8 கோடி கொடுத்து வாங்கியது. தொடர்ந்து ஷர்துல் தாகூரை 4 கோடி ரூபாய்க்கும், டேரில் மிட்செலை ரூபாய் 14 கோடி கொடுத்து எடுத்தது.
இந்த நிலையில் இந்திய இளம்வீரர் சமீர் ரிஸ்வியை ரூபாய் 8.4 கோடி கொடுத்து வாங்கி, ரசிகர்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
வெறும் 20 லட்சத்தில் ஆரம்பித்த இந்த ஏலம் குஜராத் அணியால் 8 கோடிகளை தாண்டிய போதும் சென்னை அணி கடைசி வரை பின்வாங்கவில்லை.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி வலதுகை பேட்ஸ்மேன் ஆவார். இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டி, உத்தர பிரதேசத்தின் உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ஆடி முன்னணி கிரிக்கெட் வீரர்களால் அடுத்த ரெய்னா என பாராட்டு பெற்றவர்.
The Message is clear. 😉
From the vault ft. Sameer Rizv7 pic.twitter.com/FqxEPStx02— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
அம்பாதி ராயுடு இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கருதியும், வருங்காலத்தை மனதில் வைத்தும் தான் சென்னை அணி அவரை கூடுதல் விலை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
அதோடு அவர் ௦7 என ஜெர்ஸி அணிந்து விளையாடிய புகைப்படத்தை பகிர்ந்து, இதுதான் அவரை எடுக்க காரணம் என சென்னை அணி ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
”மீண்டும் இவரா?” மினி ஏலத்தில் பெங்களூர் அணி கொடுத்த ரியாக்சன் வைரல்!
IPL Auction: சொந்த அணி கேப்டனின் ’பெரும்’ சாதனையை சில நிமிடங்களில் வீழ்த்திய பவுலர்!