யு20 ஆசிய வாலிபால் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
21 ஆவது ஆசிய ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி ரிஃபா, பஜ்ரைனில் நடைபெற்றது.
அரையிறுதி போட்டியில் இந்திய வாலிபால் வீரர்கள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தாய்லாந்து வீரர்களை 3-1 (25-21, 23-25, 25-18, 25-17) என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 29) இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய இறுதிப்போட்டியில் இரான் வாலிபால் அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
போட்டியின் இறுதியில், இந்திய அணி 1-3 (25-12, 25-19, 22-25, 25-15) என்ற கணக்கில் இரான் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது.
இதன்மூலம், 2023 ஆம் ஆண்டு யு21 உலக வாலிபால் சாம்பியன்ஷிப்பிலும் இந்தியா ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி இதற்கு முன்பு, 2002 ஆம் ஆண்டில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!