India U19 vs Australia U19: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்கின்றன. பெனோனியில் உள்ள வில்லோமோர் பார்க் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 11) நடைபெறும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஹக் வெய்ப்ஜென் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த தொடர் முழுவதுமே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகுந்த ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த 2 அணிகளும் இதுவரை விளையாடிய குரூப் பிரிவு ஆட்டங்கள் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்கள் என எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
இந்தியா U19 பிளேயிங் 11: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சாஹரன் (C), பிரியான்ஷு மொலியா, சச்சின் தாஸ், ஆரவலி அவனிஷ் (WK) , முருகன் அபிஷேக், ராஜ் லிம்பனி, நமன் திவாரி, சவுமி பாண்டே
ஆஸ்திரேலியா U19 பிளேயிங் 11: ஹாரி டிக்சன், சாம் கொன்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென், ஹர்ஜாஸ் சிங், ரயன் ஹிக்ஸ் (WK), ஆலிவர் பீக், ராஃப் மேக்மிலன், சார்லி ஆண்டர்சன், டாம் ஸ்ட்ராக்கர், மஹ்லி பியர்ட்மென், கல்லம் விட்லர்
இந்த உலகக்கோப்பை தொடரில், பெனோனி வில்லோமோர் பார்க் மைதானத்தில் இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 2வதாக பேட்டிங் செய்த அணிகளே 3 முறை வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, இன்று நடைபெற்ற 2 அரையிறுதி ஆட்டத்திலும் இதே நிலைமையே. குறிப்பாக, 2வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 2வதாக பேட்டிங் செய்தே வீழ்த்தியது. இந்நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
மறுமுனையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சென்ற நிலையில், அதற்கு இம்முறை இளம் இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
சிறையில் சக்தி ஆனந்த்… முடங்கிய MyV3Ads செயலி : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு: அரசு முக்கிய அறிவுறுத்தல்!