World Wrestling Championships 2024

2024 U17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 4 தங்கம் வென்ற இந்தியா!

விளையாட்டு

U17 World Wrestling Championships 2024: 2024ஆம் ஆண்டுக்கான U17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டின் தலைநகரான அம்மனில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று துவங்கியது. ஆகஸ்ட் 25 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்ற போட்டிகளில்,  ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.

மகளிர் 43 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் அதிதி குமாரி கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா லூயிசா கிகாவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 7-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிதி, இந்த தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

அடுத்து, மகளிர் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நேஹா, ஜப்பானின் சோ சுய்சுய்யை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் மிரட்டலாக செயல்பட்ட நேஹா 10 புள்ளிகள் குவிக்க, சுய்சுய் ஒரு புள்ளி கூட சேர்க்காததால், VSU முறைப்படி 10-0 என வெற்றி பெற்றார். இதன்மூலம், இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கத்தை நேஹா வென்று கொடுத்தார்.

தொடர்ந்து, மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் புல்கிட், டரியா பிரோலோவாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 6-3 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் புல்கிட் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

கடைசியாக, மகளிர் 73 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் மான்சி லத்தேர், ஹன்னா பிரஸ்கயாவுடன் மோதினார். இப்போட்டியில் 5-0 என முன்னிலை பெற்றிருந்த மான்சி, ஹன்னாவை கீழே படுக்க வைத்து VFA (Victory by fall) முறையில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், 2024 U17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில், ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.

முன்னதாக, ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற போட்டிகளில், கிரெகோ-ரோமன் 51 கிலோ எடைப்பிரில் சாய்நாத் பர்தி, 110 கிலோ எடைப்பிரிவில் ரோனக் தஹியா வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

இதன்மூலம், இந்த தொடரில் இந்தியா இதுவரை 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்ந்து, ஆகஸ்ட் 23 அன்று நடைபெறவுள்ள போட்டிகளில், மகளிர் 46 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த ஸ்ருதிகா சிவாஜி பாட்டில் தங்கப் பதக்கத்தை நோக்கி களமிறங்க உள்ளார்.

அதேபோல, மகளிர் 61 கிலோ எடைப்பிரிவில், காஜல் தங்கப் பதக்கத்திற்காக போட்டியிட உள்ளார். மகளிர் 40 கிலோ எடைப்பிரிவில் பாலா ராஜ் வெண்கலப் பதக்கத்திற்காக விளையாடவுள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை

காந்தாரா – 1 : களரி கற்கும் ரிஷப் ஷெட்டி

ஆப்பிரிக்க வெற்றிக் கழகமா? அப்டேட் குமாரு

World Wrestling Championships 2024

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *