வரும் 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து முடிந்துள்ளது. 10 அணிகள் 182 வீரர்களை வாங்கியுள்ளன. ரிஷப் பந்த் அதிகபட்சமாக லக்னோ அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இந்த ஏலத்தில் ஐ.பி.எல் தொடரில் கோலோச்சி வந்த 6 முக்கியமான வீரர்கள் வாங்கப்படவில்லை.
அதில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முக்கியமானவர். ஐ.பி.எல் தொடரில் 6,565 ரன்கள் அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 140 ஆகும். சராசரி 40 ரன்கள். ரூ.2 கோடிக்கு இவரின் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அணிகள் ஆர்வம் காட்டவில்லை. 38 வயதான டேவிட் வார்னர் சமீபத்தில் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்குரும் வாங்கப்படவில்லை. சென்னை அணிக்காக விளையாடிய போது பல போட்டிகளில் பெஞ்சில்தான் இவர் அமர வைக்கப்பட்டார்.
டி 20 போட்டியில் மாயங்க் அகர்வால் சிறந்த ஓப்பனராக பார்க்கப்பட்டார். ஆனால், சமீப காலமாக அவரின் பெர்பார்மன்ஸ் சரியில்லை. இதனால், இவரும் வாங்கப்படவில்லை. மாற்று தொடக்க ஆட்டக்காரர் என்ற நோக்கத்திலாவது வாங்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் நடக்கவில்லை. குஜராத் டைட்டன்சில் இருந்து விடுவிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கும் 2025 ஆம் ஆண்டு எந்த அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. காயம் காரணமாக வில்லியம்சன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜானி பாரிஸ்டோவுக்கும் எந்த அணியிலும் விளையாட வாய்ப்பு அமையவில்லை. நிலைத்தன்மையான பார்ம் இல்லாதது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதே போல ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும் எந்த அணியும் வாங்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தமிழ்நாடு போலீஸை சிறைபிடித்த புதுச்சேரி சாராயக்கடை ஊழியர்கள்! – நடந்தது என்ன?
ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்தது… இந்த சான்ஸ மிஸ் பண்ணாதீங்க மக்களே!