top 5 players most duck outs IPL
ஐபிஎல் தொடர் இந்த வருடம் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதற்கு ரசிகர்கள் உள்ளனர்.
அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. தற்போது இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக, ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட் ஆகிய வீரர்கள் குறித்து இங்கே நாம் காணலாம்.
தினேஷ் கார்த்திக்
விக்கெட் கீப்பரும், பேட்டருமான தினேஷ் கார்த்திக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான 5 ஆட்டங்களில் டக் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ஏபி டிவிலியர்ஸ்
உலகின் அபாயகரமான ஆட்டக்காரரும், மிஸ்டர் 36௦ என அழைக்கப்படுபவருமான ஏபி டிவிலியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக 4 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
கேதார் ஜாதவ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடியபோது, பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக கேதார் ஜாதவ் 4 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.
க்ளென் மேக்ஸ்வெல்
பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான கிளென் மேக்ஸ்வெல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 4 முறை டக் அவுட்டாகி இருக்கிறார்.
இயான் மோர்கன்
இங்கிலாந்து வீரரான இயான் மோர்கன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 4 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
மேலே பார்த்த 5 வீரர்களில் 3 பேர் பெங்களூர் அணிக்காக ஆடியபோது, இந்த மோசமான டக் அவுட் சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை: 500 பேர் கைது!
இன்போசிஸ் நிறுவனர் மனைவி சுதா மூர்த்தி எம்.பி.யாக நியமனம்!
top 5 players most duck outs IPL