T20 World Cup 2022 : அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் யார் யார் ?

Published On:

| By Jegadeesh

டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 7 டி20 உலக கோப்பைகளில் வெறும் 8 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளனர்.

அப்படி உலக கோப்பையில் சாதாரணமாக சதமடிப்பதே கடினமாக பார்க்கப்படும் நிலையில் அதிவேகமாக சதமடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்:

சுரேஷ் ரெய்னா

2010 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் க்ராஸ் ஐஸ்லெட் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் 16, முரளி விஜய் 0 என தொடக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில் 3 வது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக பேட்டிங் செய்தார் சுரேஷ் ரெய்னா.

அவர் 9 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 101 (60) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 186/5 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் 59 பந்துகளில் சதமடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த இந்திய கிரிக்கெட் வீரராக சாதனை படைத்துள்ளார்.

அஹமத் சேசாத்

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மிர்பூரில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடிய இவர் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 10 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 111* (62) ரன்கள் குவித்தார்.

https://twitter.com/Mukhtiar_Latif/status/1376613805531205634?s=20&t=JOmdfL8XFK-mvJ8oqbX9cg

அவரது அதிரடியால் 190/5 ரன்கள் குவித்த பாகிஸ்தான் பின்னர் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அப்போட்டியில் 58 பந்துகளில் சதமடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பிரண்டன் மெக்கல்லம்

இலங்கையில் நடைபெற்ற 2012 உலக கோப்பையில் பல்லகேலே நகரில் வங்கதேச பவுலர்களை 3 வது இடத்தில் களமிறங்கி சரமாரியாக அடித்து துவைத்த பிரண்டன் மெக்கல்லம் 11 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 123 (56) ரன்களை விளாசி டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார்.

அதனால் இறுதியில் நியூசிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற நிலையில் 51 பந்துகளிலேயே சதமடித்த அவர் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை பிடித்தார்.

கிறிஸ் கெயில்

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்த இவர் 7 பவுண்டரியும் 10 மெகா சிக்சர்களையும் பறக்கவிட்டு சதமடித்து 117 (57) ரன்கள் குவித்தார்.

top 5 batters with fastest centuries in t2 world cup history

குறிப்பாக 50 பந்துகளில் சதமடித்து முதல் போட்டியிலேயே சாதனை படைத்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 206 ரன்களை வெற்றிகரமாக எட்டிப் பிடித்து தென்னாப்பிரிக்கா வென்றது.

கடந்த 2016 இல் இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 182/6 ரன்களை குவித்தது.

அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி, சூறாவளியாக சுழன்றடித்த கிறிஸ் கெயில் 48 பந்துகளில், 5 பவுண்டரி, 11 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 100* ரன்களை, விளாசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மென், என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

அவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நாளை பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!

மாணவி சத்யா கொலை: ரயில் ஓட்டுநரிடம் சிபிசிஐடி விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share