டாப் 2 அணிகளான ராஜஸ்தான்- லக்னோ இன்று பலப்பரீட்சை!

Published On:

| By Jegadeesh

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று(ஏப்ரல் 19) நடைபெறும் 26 வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த சீசனில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் 4 வெற்றி (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (பஞ்சாப்புக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றி (டெல்லி, ஐதராபாத், பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்விகளுடன் (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக) 6 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன் மிகச்சிறப்பாக செட் ஆகிவிட்டதால் அந்த அணியின் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்ய முன்வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் 11 வீரர்கள்

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆடும் 11 வீரர்கள்

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், யுத்விர் சிங் சராக், மார்க் உட், ரவி பிஷ்னோய்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

லூப் சாலை போராட்டம்: தடுப்புகளை அகற்றிய மீனவர்கள்!

கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்: தீர்மானம் நிறைவேற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share