top 10 ipl 2024 auction players list
துபாய் கோகோ கோலா அரங்கில் இன்று (டிசம்பர் 19) நடைபெற்ற 2014 ஐபிஎல் சீசனுக்காக வீரர்கள் மினி ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றார்கள். இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் பங்கேற்றன.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தங்கள் அணியில் வைத்துக் கொள்ளலாம் என்ற முறையில் வீரர்களுக்கான அடிப்படை விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்றைய ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. டாப் 10 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த ஷாரூக்கானை குஜராத் அணி ரூ. 7.40 கோடிக்கு எடுத்துள்ளது.
ஐபில் 2024 ஏல டாப் 10 வீரர்கள் பட்டியல்:
1. மிட்செல் ஸ்டார்க் – ரூ. 24.75 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
2. பாட் கம்மின்ஸ் – ரூ. 20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
3. டேரில் மிட்செல் – ரூ. 14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
4. ஹர்ஷல் படேல் – ரூ. 11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
5. அல்ஜாரி ஜோசப் – ரூ. 11.50 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
6. ஸ்பென்சர் ஜான்சன் – ரூ. 10 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
7. சமீர் ரிஸ்வி – ரூ 8.40 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
8. ரிலீ ரோசோவ் – ரூ. 8 கோடி (பஞ்சாப் கிங்ஸ் (விலை)
9. ஷாருக் கான் – ரூ. 7.40 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
10. ரோவ்மேன் பவல் – ரூ. 7.40 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரச்சின் முதல் ராவ் வரை: சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரர்களின் முழு பட்டியல் இதோ!
அரசியல் பார்க்காமல் மத்திய அரசு உதவ வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
top 10 ipl 2024 auction players list