சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது, சுப்மன் கில்லை அவுட் செய்த போது, ‘வெளியே போ’ என்கிற ரீதியில் கண் அசைவு காட்டி அனைவர் எரிச்சலையும் சம்பாதித்தவர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது.
இந்த போட்டியின் போது, 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சுப்மன் கில் விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் களத்தில் அவரின் நடத்தையை பல பாகிஸ்தான் வீரர்கள் கூட விமர்சித்திருந்தனர். Took the liberty of teasing virat
இந்த நிலையில், அப்ரார் அகமது விராட் கோலி குறித்து மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் கூறியதாவது,’சிறுவயதில் இருந்தே எனக்கு விராட் கோலிக்கு பந்து வீச ஆசை உண்டு. துபாய் போட்டியில் அந்த ஆசை நிறைவேறியது. சவாலாக இருந்தாலும், அவரை டீஸ் செய்யும் சுதந்திரத்தை எனக்கு தந்தார். எனது பந்தை சிக்ஸர் அடிக்க முடியுமா? என்று கேட்டேன். அதற்காக, அவர் கோபப்படவில்லை. எல்லாவற்றையும் விட அவர் நல்ல மனிதர். போட்டி முடிந்ததும் சிறப்பாக பந்து வீசியதாக என்னை பாராட்டினார்.
அந்த நாளில் அதைத்தான் நான் சிறந்ததாக உணர்ந்தேன். 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடும் காலத்தில் இருந்தே கோலிக்கு ஒரு நாள் நான் பந்து வீசுவேன் என்று சக வீரர்களிடம் கூறுவேன். அதனால், துபாய் போட்டியில் சற்று உணர்ச்சிக்கரமாக இருந்தேன். கோலியின் பிட்னெஸ் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. விக்கெட்டுகளுக்கிடையே ரன் எடுக்க ஓடும் அவரது திறமையே விராட் கோலியை ஆகச்சிறந்த கிரிக்கெட்டராக காட்டுகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். the liberty of teasing virat
சுப்மன் கில்லை அவுட் செய்த போது நடந்து கொண்ட விதம் சரியா ? என்று கேட்ட போது, ‘அது எனது ஸ்டைல். எந்த நடுவரும் என்னிடத்தில் தவறு என்று கூறவில்லை. வேண்டுமென்றும் நான் செய்யவில்லை. எனினும், எனது செய்கை புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அப்ரார் அகமது கூறியுள்ளார்.