இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

விளையாட்டு

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 20) மதியம் 12.45 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் போட்டிக்கான தொடரை வெல்லும் என்பதால்  கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அந்நாட்டின் ஹராரே நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 20)  இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி வெல்லும்.

இந்திய அணியின் முதல் ஒருநாள் போட்டியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், “ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் சரியான முறையில் பந்து வீசியதைப் பார்க்க சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியும் ஹராரே நகரில் நடைபெறவிருப்பதால் இந்திய அணியின் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

-ராஜ்

இந்தியா Vs  ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: தவானின் மகிழ்ச்சியும் வருத்தமும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *