TNPL: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

Published On:

| By Jegadeesh

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதின.

இதில் திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் 20, ஷிவம் சிங் 21 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித், பூபதி குமார், அஸ்வின் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

பின்னர் ஆதித்தியா கணேஷ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 ரன்கள் எடுக்க அதே நேரம் களத்தில் இருந்த சரத்குமார் 25 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தின் இறுதியில், திண்டுக்கல் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சேப்பாக் கில்லிஸ் அணி.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் ஷிவ் 1 ரன்னும் ராஜன் பால் 6 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய ஜெகதீசன், பாபா அப்ரஜித் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழக்க அப்ரஜித் ஒரு புறம் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக ஆடிய அப்ரஜித், வருண் சக்கரவர்த்தி பந்தில் அவுட்டானார்.

இந்நிலையில், 20 வது ஓவரின் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை பட்டது. அப்போது சிங்கிள் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு முயற்சி செய்த போது ராஹில் ஷா ரன்அவுட் ஆக்கப்பட்டார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

யோகாவிற்கு எந்த காப்புரிமைகளும் இல்லை: பிரதமர் மோடி

பிகார் விசிட்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்

’சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ : ஆளுநர் பேச்சு!

டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைவர் ஆகிறார் ஓபிஎஸ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel