தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று(ஜூலை 12) நடைபெற்று வருகிறது. இதில் லைக்கா கோவை கிங்ஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில், டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர்.
7 ரன்களில் சுஜய் தனது விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் அதிரடியாக ஆடிய சுரேஷ் குமார் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என மொத்தம் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் 12 ரன்களிலும் , ஷாருக்கான் 7 ரன்களிலும் ஆட்டமிழக்க முகேஷ் மற்றும் அத்தீக் ரகுமான் ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்படி அத்தீக் ரகுமான் 21 பந்துகளில் 1 சிக்ஸர் , 8 பவுண்டரிகள் என மொத்தம் 50 ரன்களை குவித்தார். முகேஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 50 ரன்களை எடுக்க 20 ஓவர் முடிவில் லைக்கா கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 205 ரன்களை குவித்தது.
தற்போது 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி தமிழ்நாடு ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
IND vs WI: இந்திய அணியில் களமிறங்கிய 2 இளம் வீரர்கள்!
“எல்லோருக்கும் இதயத்தில் 40% அடைப்பு இருக்கும்” : செந்தில் பாலாஜி வழக்கில் துஷார் மேத்தா வாதம்!