தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (ஜூலை 10) நடைபெற்று வருகிறது.
இதில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும் , நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விமல் குமார், சிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் விமல் குமார் 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் சிவம் சிங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்படி அவர் 46 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என மொத்தம் 76 ரன்களை குவித்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் மற்றொரு வீரரான பூபதி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகள் என மொத்தம் 41 ரன்களை எடுத்தார்.
பின்னர், களமிறங்கிய ஆதித்யா, சரத்குமார் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையை கட்ட பாபா இந்திரஜித் மற்றும் சுபோத் பாடி ஆகியோர் களத்தில் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 185 ரன்கள் எடுத்தது.
தற்போது 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அவதூறு வீடியோ: கனல் கண்ணன் கைது!
சிறு உணவகங்களில் விலை உயர்வு! அடுத்து பெரிய ஹோட்டல்களிலுமா?