TNPL: மதுரை அணிக்கு 106 ரன்கள் இலக்கு!

விளையாட்டு

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய போட்டியில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் சரண் ஆகியோர் களமிறங்கினர். ரன்கள் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கங்கா ஸ்ரீதர் ராஜூ தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சரண் 9 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைகட்டினார். பின்னர் களமிறங்கிய பிரான்சிஸ் மற்றும் மணி பாரதி இருவரும் பொறுமையாக விளையாடினர்.

அதில் அதிகபட்சமாக மணி பாரதி 40 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸர் என மொத்தம் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் மதுரை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இவ்வாறாக திருச்சி அணி 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மதுரை அணியின் பந்து வீச்சாளர்கள் சரவணன் 3 விக்கெட்டும் , குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

தற்போது 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி விளையாடி வருகிறது.


மு.வா.ஜெகதீஸ் குமார்

செந்தில் பாலாஜி நீக்கம்: முதல்வர் ரியாக்‌ஷன்!

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0