குஜராத் அணியின் வெற்றிக்கு உதவிய தமிழக வீரர்

விளையாட்டு

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி நேற்று (ஏப்ரல் 5) டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பேட்டிங்கை தொடங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் பிரித்வி ஷா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து ஷான் மார்ஷும் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க டெல்லி அணிக்கு கை கொடுத்தார் இளம் வீரர் ஷர்ப்ஃராஸ் கான். எனினும் யாரும் பெரிய அளவில் நிலைத்து நின்ற ஆடாத நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் வார்னர்(37), அக்சர் பட்டேல் (36), ஷர்ப்ஃராஸ் கான்(30) ரன்கள் குவித்தனர்.

tn player sai sudhashan help gujarat 2nd win

குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷீத்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி.

தொடக்க வீரர்களான விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

எனினும் 21 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சாய் சுதர்ஷனுடன், கடைசி நேரத்தில் டேவிட் மில்லரும் சேர்ந்து அதிரடி காட்ட குஜராத் அணி 18.1 ஓவர்களிலேயே 163 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அசத்திய சாய் சுதர்ஷன் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி தொடர்ச்சியாக பெற்ற 2வது வெற்றியாகும். அதேவேளையில் டெல்லி அணி தொடர்ச்சியாக பெற்ற 2வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

அருணாசலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயரை வெளியிட்ட சீனா!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி, அண்ணாமலை கூட்டணித் தூண்டில்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *