துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள்!

விளையாட்டு

பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென் கொரியாவில் செங்க்வான் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 24 தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் 14 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 18 ) இந்தியா ஒரு தங்கம் , ஒரு வெள்ளி , ஒரு வெண்கலம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றது.

பி3 25 மீட்டர் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்திய அணியின் ராகுல் ஜாக்கர் 20 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார். அதே பிரிவில் விளையாடிய இந்திய வீராங்கனை பூஜா அகர்வால் 14 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.

மகளிருக்கான ஆர்2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 247.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தனிமையை உணர்கிறேன்: விராட் கோலி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0