’’தோனியை வெறுப்பவங்க பிசாசாதான் இருக்கனும்’’: குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா

விளையாட்டு

தோனியை ஒருவர் வெறுக்க வேண்டும் என்றால் அவர் பிசாசாகத்தான் இருக்க வேண்டும் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

லீக் ஆட்டங்கள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில் இன்று(மே23) மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ப்ளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது.

இதில் குவாலிஃபயர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

குஜராத் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் முதல் போட்டி இது என்பதால் சென்னை அணி பற்றியும், எம்.எஸ்.தோனி பற்றியும் குஜராத் அணி தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா பேசுகையில், ”நான் எப்போதுமே எம்.எஸ் தோனியின் மிகப்பெரிய ரசிகன் தான். எம்.எஸ் தோனியை வெறுக்க வேண்டுமென்றால் அவர் பிசாசாகத்தான் இருக்க வேண்டும். எம்எஸ் தோனியை பலரும் சீரியஸான நபராக இருப்பார் என்று நினைக்கிறார்கள். ஆனால் தோனி ஜாலியான மனிதர்.

Those who hate Dhoni must be devils

அவர் எப்போதும் என் சிறந்த நண்பர். எப்போதும் என் சகோதரர் போன்றவர். அதேபோல் மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் ஏராளமான விஷயங்களை தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவரை பார்த்தும், அவருடன் பேசியும் ஏராளமான முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்த தங்கமகன் நீரஜ் சோப்ரா

2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0