ரஜினி எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினரை போல் உணர வைத்தது என்று கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று(மே 15) நேரில் சந்தித்தனர்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக உரையாடினர்.
பின்னர், இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. ரஜினி ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை கொடுத்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து வருண் சக்கரவர்த்தி இன்று (மே16) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”இரவு வானில் தினமும் ஒரு மில்லியன் நட்சத்திரங்களை பார்க்கலாம். ஆனால் இந்த சூப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒரு முறையாவது நடக்கும்.
ஆம்..அது நடந்தது. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன். அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினரை போல் உணர வைத்தது. லவ் யூ தலைவா.” என்று கூறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்
தேனாறு ஓடும் என்றார்கள்… சாராய ஆறுதான் ஓடுகிறது: எடப்பாடி