சி.எஸ்.கே. வருமானம் 131 சதவிகிதம் உயர்வு… எப்படி நடந்தது இந்த மாற்றம்!

கடந்த 2023- 24 நிதியாண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருமானம் ரூ.292 கோடியில் இருந்து, ரூ.676 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் வலிமையான பிராண்டாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருதப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் நடத்துகிறது. இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக காசி விஸ்வநாதன் உள்ளார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வருமானம் 2024 ஆம் நிதியாண்டில் ரூ.676.40 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வருமானம் ரூ.292 கோடி ஆகும். கடந்த 2023 ஆம் நிதியாண்டில் மொத்த வருமானமே ரூ.292.34 கோடியாகவும், நிகர வருமானம் ரூ.52 கோடியாக  இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது கிட்டத்தட்ட 131 சதவிதம் அதிகம் ஆகும். ஐ.பி.எல்லில் கிடைக்கும் வருமானத்தை அணிகளுக்கு பிசிசிஐ பிரித்து கொடுப்பது மற்றும் டிக்கெட் விற்பனை வழியாக அணிக்கு வருமானம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதோடு,  Superking Ventures Pvt Ltd என்ற துணை நிறுவனமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க 9 கிரிக்கெட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் சேலத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையங்களில் தலா 1,100 மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெறுகின்றனர். சூப்பர் கிங்ஸ் வென்ச்சர்டு நிறுவனத்தின் வருமானமும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2.56 கோடியாக இருந்த வருமானம் நடப்பு நிதியாண்டில் ரூ.5.47 கோடியாக உயர்ந்துள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாயத்துக்கு சேவை செய்யும் வகையில் சூப்பர்கிங் வென்ச்சர்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இதன்கீழ் பயிற்சி பெற்ற 19 வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நகரங்களில்  கிரிக்கெட் மையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன . செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை சூப்பர்கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும்! – ராமதாஸ்

மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு : தட்டி கேட்ட ஆசிரியரை நேரில் பாராட்டிய அன்பில் மகேஷ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts