உலகக்கோப்பையுடன் நாளை நாடு திரும்புகிறது இந்திய அணி!

Published On:

| By indhu

உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை (ஜூலை 3) தனி விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.

இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்

டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. அங்கு பார்படாஸ் நகரில் இந்திய அணி வீரர்கள் தங்கி இருந்தனர். இந்த போட்டியில் வென்ற இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாடு திரும்ப தயாரான நிலையில், சூறாவளி வடிவில் சிக்கல் சூழ்ந்துக்கொண்டது.

அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டு இருந்த 4ஆம் பிரிவு சூறாவளியால் மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக இந்திய அணி தங்கியுள்ள பார்படாஸ் நகரில் இருந்து 570 கி.மீ. தொலைவில் ’பெரில்’ புயல் மையம் கொண்டு இருந்ததால், பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் நேற்று (ஜூலை 1) விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன.

முன்னதாக, இந்திய அணி வீரர்கள் பிரிஜ்டவுன் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் சென்று அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் டெல்லி வருவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பெரில் புயல் காரணமாக இந்திய வீரர்களின் பயணம் தாமதமானது.

இந்நிலையில், தற்போது பார்படாஸ் நகரில் இன்று (ஜூலை 2) புயல் கரையை கடந்துள்ளது. இருந்தபோதும், அங்கு இயல்பு நிலை திரும்பாததால், விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, இந்திய அணி வீரர்களை தனி விமானம் மூலம் நாளை (ஜூலை 3) மாலை அல்லது இரவிற்குள் டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு திரும்பும் இந்திய வீரர்கள் முதலில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆடி மாத இலவச ஆன்மிகப் பயணம் : மூத்த குடிமக்களுக்கு சேகர்பாபு அழைப்பு!

கமலை சந்தித்து நன்றி தெரிவித்த மனிஷா கொய்ராலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel