இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிப்பெற்று ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்திய அணி. The Indian team whitewashed England!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இங்கிலாந்து அணி. ஏற்கெனவே நடந்த 5 போட்டிகள் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
தொடர்ந்து நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தநிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது.
சுப்மன் கில் அபார சதம்! The Indian team whitewashed England!
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தயாரானது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் சதம் (112) விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 78 ரன்களும், விராட் கோலி 52 ரன்களும், கே.எல்.ராகுல் 40 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சறுக்கல் பேட்டிங்! The Indian team whitewashed England!
தொடர்ந்து 357 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்க தந்த பிலிப் சால்ட்(23) மற்றும் பென் டக்கெட்(34) ஆகியோரின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
அதன்பின்னர் டாம் பாண்டென், ஜோ ரூட், மற்றும் அட்கின்சன் மட்டுமே ஓரளவு தாக்குபிடித்த நிலையில் மற்ற வீரர்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி உள்ளது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடைசியில் போட்டியில் சதம் அடித்ததுடன், தொடரில் அதிகபட்சமாக 259 ரன்கள் குவித்த இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.