ஆசியக் கோப்பை: இந்திய அணியின் வீராங்கனைகள் யார்?

விளையாட்டு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியக் கோப்பை 2022 டி20 மகளிர் கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

இந்நிலையில், ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் அணி

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

ஆசியக் கோப்பை 2022 ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், நேற்று நடைபெற்ற டி20 உலககோப்பை முதல் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது.

இதனால், மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றுமா என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

மோனிஷா

டி20 தொடர் முதல் போட்டி: இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

அம்பானியோட வேண்டுதல் என்ன?: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.