நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணங்களை அந்த அணியின் முன்னாள் கேப்டனான மார்க் வாக் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் “இந்த போட்டியில் மைதானம் மிகவும் பிரஷ்ஷாக இருந்தது. எனவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த சாதகமாக இருந்தது. ஜடேஜா முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை விரைவில் வீழ்த்தி இருக்க வேண்டும்.
ஆனால் அக்சர் பட்டேல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இறுதி நேரத்தில் அடித்த ரன்கள் மற்றும் முகமது ஷமியின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது என ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக இவை அமைந்து விட்டன.
அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோர் கடைசி நேரத்தில் சேர்த்த ரன்கள் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது. அதேபோன்று என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் இன்னும் சில ஓவர்களை கூடுதலாக வீசி இருக்கலாம்.இந்த மைதானத்தில் ஷாட் பிட்ச் பந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியது தவறு என்று கூறினார்.
மேலும், இதுபோன்ற மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை அதிக அளவில் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதோடு ஆஸ்திரேலியா அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸ்ஸிலேயே பின்னடைவை சந்தித்ததால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர்களால் அந்த சரிவிலிருந்து மீள முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்