மாமல்லபுரம் வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி!

Published On:

| By admin

ஜூலை 19 ஆம் தேதி பிரதமர் டெல்லியில் தொடங்கி வைத்த ஒலிம்பியாட் ஜோதி இன்று ( ஜூலை 27 ) காலை மாமல்லபுரம் வந்து சேர்ந்தது.

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக சதுரங்க போட்டி வீரர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

இதனிடையே, ஜூலை 19 அன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். தற்போது ஒலிம்பியாட் ஜோதி இந்தியா முழுவதும் 75 நகரங்களை கடந்து நேற்று முன்தினம் புச்சேரியில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு வந்தது. இதற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை, கன்னியாகுமாரி, மதுரை, தஞ்சை வழியே பயணித்து இன்று காலை போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரம் வந்தது.

விளையாட்டு துறை சார்பில் மேளதாளம் முழங்க செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விளையாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன் செஸ் கூட்டமைப்பு அதிகாரிகள் பெற்றுக்கொண்டு மாமல்லபுரத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னையில் வலம் வர உள்ளது. மாநில கல்லூரி மைதானத்தில் தொடங்கி, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, ராஜாமுத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்று முடிவடையும்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment