இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவர் தற்போது மெல்ல மெல்ல தனது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு வருகிறார்.
அவர் முற்றிலும் குணமாக ஒரு ஆண்டுக்கு மேலாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தற்போது தனது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வரும் ரிஷப் பண்ட் அவ்வப்போது அவர் செய்யும் சில விசயங்களை ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் வீட்டிற்கு வெளியில் வந்து வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தையும், அதனைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு அதனை வீடியோவாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், ரிஷப் பண்டை, இந்த சாம்பியன் மீண்டும் எழப்போகிறார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 16 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ என்ன ஒரு பையன் எப்போதும் நேர்மறையாகவும் வேடிக்கையாகவும் இருப்பான். உங்களுக்கு அதிக சக்தி ரிஷப் பண்ட். இந்த சாம்பியன் மீண்டும் எழப்போகிறார்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்த வார தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்!
”ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை”: திட்டமிட்டபடி போராட்டம்!