sumit nagal enters the top 100

Tennis : முதன்முறையாக டாப்-100ல் நுழைந்து இந்திய வீரர் சாதனை!

சென்னை ஓபன் பட்டம் வென்ற பிறகு சுமித் நாகல் முதல்முறையாக சர்வதேச டென்னிஸ் டாப்-100 தரவரிசையில் நுழைந்து சாதனை படைத்துள்ளார். sumit nagal enters the top 100

சென்னையில் நடைபெற்று வந்த சென்னை ஓபன் டென்னிஸ் ஏடிபி சேலஞ்சர் இறுதிப்போட்டி நேற்று மாலை SDAT ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் 26 வயதான சுமித் நாகலும், இத்தாலியின் லூகா நார்டியும் மோதினர். சொந்த நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் அபாரமாக ஆடிய நாகல் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.

https://twitter.com/HiteshMadras/status/1756714857372749928

தொடர்ந்து அதிரடியாக ஆடி இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் வென்றார். வெறும் ஒரு மணி நேரம் 37 நிமிடங்களில் 20 வயதான நார்டியை வீழ்த்தி சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது ஐந்தாவது ஏடிபி சேலஞ்சர் ஒற்றையர் பட்டமாகும்.

இதன்மூலம் சென்னை ஓபன் ஏடிபி அளவிலான போட்டியில் ஆடவர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

முன்னதாக இந்தியாவின் லியாண்டர் பயஸ் (1996), சோம்தேவ் தேவ்வர்மன் (2009) மற்றும் யூகி பாம்ப்ரி (2018) ஆகியோர் இறுதிப்போட்டி வரை முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து இன்று வெளியான சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக டாப் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நாகல் 23 இடங்கள் முன்னேறி 98வது இடத்தை பிடித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு கணினிமயமாக்கப்பட்ட ஏடிபி தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, உலகின் முதல் 100 வீரர்களுக்குள் இடம்பிடித்த 10வது இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் நாகல் இன்று பெற்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 75 இடத்தை பெற்று முதல் 100 இடங்களுக்குள் தடம் பதித்த இந்திய வீரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம்!

கடுப்பான பிசிசிஐ… கண்டிப்பா நீங்க இத செய்யணும்… வீரர்களுக்கு பறந்த உத்தரவு!

மூன்று நிமிட உரை… சட்டமன்றத்தில் இருந்து மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு!

sumit nagal enters the top 100

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts