விராட் கோலி சாதனை: சச்சின் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

புதன்கிழமை நடைபெற்ற  நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை கடந்து 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

புதன்கிழமை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது 50வது சதத்தை விராட் கோலி பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது கிவிஸ் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் தனது 50வது ஒரு நாள் சதத்தை பதிவு செய்துள்ளார். சதம் அடித்த உடனேயே அரங்கில் அமர்ந்து விளையாட்டைக் கண்டுகொண்டிருந்த சச்சின் டெண்டுல்கருக்குத் தலைவணங்கி தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார். அதேபோல சச்சின் டெண்டுல்கரும் எழுந்து நின்று கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் விராட்கோலியுடனான தனது முதல் சந்திப்பை நினைவுகூர்ந்து அவரைப் பாராட்டி பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

”இந்தியன் டீம் டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது,  அணியினர் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட எனக்கு பெரிய மகிழ்ச்சி இருக்க முடியாது. உலகின் மிகப்பெரிய அரங்கில் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் என் சொந்த மண்ணில் அதைச் செய்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது “, என்று அவர் பதிவிட்டுள்ளார்.

விராட்கோலியின் இந்த சாதனையை பாரட்டியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ,” 50 ஒருநாள் சதங்களை தங்கள் பைகளில் அள்ளிச் செல்கிறீர்கள். தங்கள் ஒவ்வொரு ஷாட்டிலும் வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சாதனைக்குத் தலை வணங்குகிறோம் “, என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

சண்முகப் பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel