தேசிய விருதுகளை பெற்ற தமிழ்நாட்டு வீரர்கள்!
இந்தியாவின் 2வது மிகப்பெரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருதினை இன்று தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் மற்றும் ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது பெறும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு 25 வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தார்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் மாற்றுத்திறனாளி பேட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோர் அர்ஜுனா விருதை பெற்றனர்.
வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதை தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதினை ஜிவன் ஜோட் சிங் (வில்வித்தை), முகமது அலி (குத்துச்சண்டை) சுஜித் சிங் (மல்யுத்தம்) சும சித்தார்த் ஷிருர்(பாரா சூட்டிங்) ஆகியோர் பெற்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மழையை எதிர்பார்த்து மிரட்டிய நியூசிலாந்து… தொடரை இழந்தது இந்தியா
“நான் தயார்… நீங்கள் தயாரா?”: மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்!