ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்து வருகின்றனர்.
அதன்படி தொடரின் 11-வது நாளான இன்றுவரை இந்தியா 63 பதக்கம் வென்று 4வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.
கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற 400 மீ தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தயத்தின் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.42 வினாடிகளில் இலக்கை எட்டி இந்திய தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 3) நடைபெற்ற 400 மீ தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தயத்தின் இறுதிப்போட்டியில் வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
https://twitter.com/Media_SAI/status/1709169988333138058
நேற்று நடைபெற்ற 4 x 400 மீ கலப்பு ரிலே பிரிவில், வெண்கலம் வென்ற இந்திய அணியிலும் வித்யா ராம்ராஜ் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…