செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ்

விளையாட்டு

தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் நாட்டின் 75-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக அந்தஸ்து பெற்றுள்ளார்.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரணவ் வெங்கடேஷ் 2015-ல் 9-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்.

9 வயது முதல் பிரணவ் வெங்கடேஷ் சதுரங்க போட்டி விளையாடி வருகிறார். எதிர்காலத்தின் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று அப்போதே பாராட்டப்பட்டார்.

2014-ம் ஆண்டு இளம் வீரர்களுக்கான செஸ் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியில் பிரணவ் வெங்கடேஷ் அங்கம் வகித்திருந்தார். அந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் இடம் பெற்றிருந்தார். தற்போது நடைபெற்று வருகிற செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் பிரணவ் வெங்கடேஷ். தமிழகத்தில் ஏற்கனவே 26 கிராண்ட் மாஸ்டர் இருக்ககூடிய சூழ்நிலையில், 27-வது கிராண்ட் மாஸ்டராக பிரணவ் வெங்கடேஷ் தேர்வாகியுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் என்றால் என்ன?

கிராண்ட்மாஸ்டர் என்பது உலக சதுரங்க அமைப்பான FIDE ஆல் செஸ் வீரர்களுக்கு வழங்கப்படும் பட்டமாகும். செஸ் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்துக்கு அடுத்தபடியாக இந்த பட்டமே உயர்ந்தது. ஒரு செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற வேண்டுமென்றால், உலக சதுரங்கக் கூட்டமைப்பால் குறைந்தபட்சம் 2500 புள்ளிகள் என்ற ரேட்டிங்கை பெற்றிருக்க வேண்டும். பிரணவ் வெங்கடேஷ் இந்தத் தகுதிகளைப் பெற்றிருப்பதால் அவர் கிராண்ட் மாஸ்டராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். வாழ்நாள் முழுதும் இந்த பட்டம் உரித்தாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

செல்வம்

கால்பந்துக்கு மாறிய செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.