விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்குத் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
அர்ஜுனா விருது என்பது தேசிய அளவில், தங்களது பிரிவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதாகும். இந்த விருதினை விளையாட்டு வீரர்கள் அனைவரும் மிகப்பெரிய கவுரவம் என்று கருதுவார்கள்.
இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறுவதற்காகத் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
பிரக்ஞானந்தாவின் பெயருடன் சேர்த்து கோவையைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான பக்தி குல்கர்னியும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடந்த 2018 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 13வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வென்றார். மீண்டும் மே மாதம் இரண்டாவது முறையாக மேக்னஸ் கார்ல்சனை வென்று உலகளவில் உள்ள செஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுவரை தமிழகத்திலிருந்து 4 செஸ் வீரர்களின் பெயர் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
நான் 360 வீரர் அல்ல: சூர்ய குமார் யாதவ்
காவல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வு குழு!