புரோ கபடி லீக் தொடரில் புனே அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது லீக் ஆட்டத்தில் புனே அணியை எதிர்த்து களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி ஆக்ரோஷமாக விளையாடியது. போட்டியில் ஒரு முறை கூட தமிழ் தலைவாஸ் அணி புள்ளியில் புனேவை விட பின் தங்கவில்லை. குறிப்பாக தமிழ் தலைவாஸ் வீரர்கள் நரேந்தர் மற்றும் சச்சின் ஆகியோர் அபாரமாக விளையாடி புள்ளிகளை குவித்து கொண்டிருந்தனர்.
தமிழ் தலைவாஸ் அணி 6- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அப்போது, புனே அணி சூப்பர் டேக்கல் செய்து நான்கு புள்ளிகளை வாங்கியது. ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் புனேவை ஆல் அவுட் செய்தது. இதன் மூலம் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 19- 15 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது. தமிழ் தலைவாஸ் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்க புனே அணி கடைசி கட்டத்தில் வெற்றிக்காக கடும் போராட்டம் நடத்தியது. எனினும் புனேவுக்கு வெற்றி கிட்டவில்லை.
இறுதியில் தமிழ் தலைவாஸ் 35 – 30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை ருசித்தது. தமிழ் தலைவாஸ் வீரர்கள் நரேந்தர் 9 புள்ளிகளும், சச்சின் 8 புள்ளிகளும் பெற்று வெற்றிக்கு வித்திட்டனர். கடந்த 14 ஆட்டங்களில் புனே அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. அதற்கு , இப்போது தமிழ் தலைவாஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போது, தமிழ் தலைவாஸ் அணி 10 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கின்றது. முதலிடத்தில் 11 புள்ளிகளுடன் புனே அணி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் அதிர்வு?… அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்!
இர்பானுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்