இனிமே இதை செய்ய மாட்டோம்… மன்னிப்பு கேட்டது தமிழ் தலைவாஸ்!

Published On:

| By Manjula

தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி அதற்காக, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது.

புரோ கபடி தொடரின் 1௦-வது சீசன் தற்போது நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் சார்பாக தமிழ் தலைவாஸ் அணி விளையாடி வருகிறது.

இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய தலைவாஸ் அணி, தற்போது வரிசையாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதிலும் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இருந்தும் கூட, ஒரு போட்டியில் கூட தமிழ் தலைவாஸ் அணியால் வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அதற்காக ரசிகர்களிடம் தற்போது மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த அணி, ”முதலில் நாங்கள் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் நடந்த போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு மன்னித்து விடுங்கள். இனி வரும் போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். கண்டிப்பாக ப்ளே ஆப் சுற்றில் விளையாடுவோம்,” என தெரிவித்து உள்ளனர்.

நாளை (டிசம்பர் 31) இரவு 9 மணிக்கு உத்தர பிரதேசத்தின் சஹீத் விஜய் சிங் பதிக் காம்ப்ளக்ஸில் நடைபெறும் 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரசிகர்களுக்கு கொடுத்த வாக்கை தமிழ் தலைவாஸ் அணி காப்பாற்றுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் பலி: நிவாரணம் அறிவிப்பு!

2023 தமிழ் சினிமா சிறப்பு பார்வை 2 : வசூலை குவித்த படங்கள் எது? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel