வருகின்ற 2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டிற்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
வருடாவருடம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தென் மாவட்டங்களில் சீரும், சிறப்புமாக நடைபெற்று வருகிறது. பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 6-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
அங்குள்ள அடைக்கலமாதா தேவாலய திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் விமரிசையாக நடைபெற இருக்கிறது.
ஜல்லிக்கட்டிற்கான வாடிவாசல் அமைப்பது உள்ளிட்ட போட்டிக்கான முன்னேற்பாடுகளை, தற்போது விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளூர் மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் : என்னென்ன வசதிகள் உள்ளன?
நெல்லையில் நிவாரண உதவி : விஜயகாந்த் மறைவால் தயங்கிய விஜய்