உலக  ஸ்னூக்கர் போட்டி: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு!

விளையாட்டு

ருமேனியா நாட்டில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீராங்கனை அனுபமா ராமச்சந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக  ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியா நாட்டிலுள்ள புகாரெஸ்ட் நகரில் நடைபெற்றது.

இதில் 21 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை அனுபமா ராமச்சந்திரன் இறுதிப்போட்டியில்,

தாய்லாந்து வீராங்கனை பஞ்சாயா சன்னோவை எதிர்கொண்டு இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

ருமேனியா உலக சாம்பியன்ஷிப் ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இன்று தமிழகம் திரும்பிய அனுபமா ராமச்சந்திரன் அவரது பயிற்சியாளருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

world snooker tournament
அப்போது பேசிய அவர், இவர் சர்வதேச போட்டிக்கு செல்ல தமிழக அரசு பயணச்செலவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்ததால் போட்டியில் பங்கேற்க முடிந்ததாகக் கூறினார்.

கல்லூரியில் படித்துக்கொண்டே கடும் பயிற்சி மேற்கொண்டதால் இரண்டாம் இடம் பிடிக்க முடிந்ததாகவும் அனுபமா தெரிவித்தார்.

16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் 2017ம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அனுபமா ராமச்சந்திரன், தமிழகத்திலிருந்து ஸ்னூக்கர் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண்.

பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாட்டில் பலமுறை மாநில சாம்பியன் பட்டம் வென்றவர் அனுபமா ராமச்சந்திரன், ஜூனியர் பிரிவில் 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர்.

இதனைத்தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெறும் பெண்கள் ரெட் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும்,

நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறும் பெண்கள்  ரெட் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய அணிக்காக பங்கேற்கிறார்.

கலை.ரா

ஆசியக் கோப்பை டி 20 கிரிக்கெட் நாளை தொடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0