செஸ் ஒலிம்பியாட்: 7 சுற்றிலும் வெற்றிபெற்ற தமிழக வீரர்!

விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்டில் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டியின் 7வது சுற்றில், இந்திய அணியின் ஓபன் ஏ பிரிவு, இந்தியா சி பிரிவை எதிர்கொண்டது. இதில் இந்தியா ஏ அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா சி அணியை வீழ்த்தியது. இதில் அா்ஜுன் எரிகைசி அபிஜித் குப்தாவையும், நாராயணன் புரானிக் அபிமன்யுவையும் வீழ்த்தினா். பெண்டாலா ஹரிகிருஷ்ணன் – சூா்ய சேகா் கங்குலி, விதித் குஜராத்தி – சேதுராமன் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின.

பிரக்ஞானந்தா வெற்றி!

கியூபாவை எதிர்கொண்ட இந்திய பி அணி 3.5-0.5 என புள்ளிக்கணக்கில் அபார வெற்றி கண்டது. இந்திய பி அணியில் விளையாடிய தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா வெற்றி பெற்றனர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41ஆவது நகர்த்தலில் கியூபா வீரர் ஐசான் ரெனால்டோவை வீழ்த்தினார்.

இதேபோல் கியூபா வீரர் கார்லஸ் டேனியலுடன் மோதிய தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றார். அவர், 46ஆவது நகர்த்தலில் கியூபா வீரரை வென்றார். செஸ் ஒலிம்பியாட்டில் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் குகேஷ் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்தியா ஏ மகளிர் அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் அஜா்பைஜானை வென்றது. கொனேரு ஹம்பி தோல்வி காண, ஹரிகா டிரா கண்டார். வைஷாலி, தான்யா சச்தேவ் ஆகியோர் எதிரணியை வீழ்த்தினர். இந்தியா பி மகளிர் அணி கிரீஸிடம் வீழ்ந்தது. வந்திகா வெற்றிபெற, சௌம்யா சுவாமிநாதன் எதிராளியிடம் தோற்றாா். மேரி ஆன் டிரா செய்ய, திவ்யா தேஷ்முக் எதிராளியைச் சாய்த்தாா். இந்தியா சி மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வென்றது. ஈஷா காரவேட், பி.வி.நந்திதா ஆகியோர் எதிரணி வீராங்கனைகளை வென்றனா். பிரதியுஷா போடா, விஷ்வா வஸ்னவாலா ஆகியோர் விளையாடிய ஆட்டங்கள் டிரா ஆகின.

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய வீரா் குகேஷைப்போல் போலந்து வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, கஜகஸ்தான் வீரா் நோகா்பெக் கஸிபெக் ஆகியோா் தொடா்ந்து 6 வெற்றிகளைக் குவித்துள்ளனா். 6 சுற்றுகள் முடிவில் போலந்து நாட்டின் இளம் வீராங்கனை ஒலிவியா கியோல்பாஸா, சிரியா, குரோஷியா, வியட்நாம், நெதா்லாந்து, ருமேனியா, சொ்பியா வீராங்கனைகளை வீழ்த்தி 6 வெற்றிகளைக் குவித்துள்ளாா்.
ஜெ.பிரகாஷ்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *