தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் இன்று (ஆகஸ்ட் 31) டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த வாரம் அஜர்பைஜன் தலைநகர் பாகு நகரில் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரரும், கிராண்ட்மாஸ்டருமான பிரக்ஞானந்தா கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டியில் அவர் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்டு தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி உள்ள பிரக்ஞானந்தாவுக்கு நேற்று (ஆகஸ்ட் 30) சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டியில் வென்ற வெள்ளி பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சத்தை பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று இரவு 7 மணிக்கு மிகவும் சிறப்பான பார்வையாளர்கள் என்னை சந்தித்தனர்.
இந்திய இளைஞர்களுக்கு உதாரணமாக திகழும் பிரக்ஞானந்தாவின் ஆர்வமும், விடாமுயற்சியும் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1697250058696274191?s=20
அதேபோல் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மிகவும் பெருமையான தருணமாக உள்ளது. என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அகவிலைப்படி நிலுவை: ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம்!
பச்சோந்தியாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டது: உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்!
அதானி குழும முறைகேடு: மோடி தயங்குவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!