Table Release for Border - Gavaskar Test Series

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் எப்போது? – முழு விவரம் இதோ!

விளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் கோப்பை:

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோரை பெருமைப்படுத்தும் விதமாக, கடந்த 1996-ஆம் ஆண்டு முதல், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ‘பார்டர் – கவாஸ்கர் கோப்பை’ என்ற பெயரில் டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.

தற்போது, 2024ஆம் ஆண்டுக்கான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் 2024ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் தொடங்கவுள்ளது.

தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நகரில் 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முழு அட்டவணை

முதல் டெஸ்ட் – நவம்பர் 22  – 26 ஆம் தேதி வரை – பெர்த் மைதானம், பெர்த் (ஆஸ்திரேலியா)
2வது டெஸ்ட் – டிசம்பர் 6 – 10 ஆம் தேதி வரை – ஓவல் மைதானம், அடிலெய்டு (பிங்க் பால்)
3வது டெஸ்ட் – டிசம்பர் 14 – 18 ஆம் தேதி வரை – காபா மைதானம், பிரிஸ்பேன்
4வது டெஸ்ட் – டிசம்பர் 26 – 30ஆம் தேதி வரை – மெல்பர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்பர்ன்
5வது டெஸ்ட் – ஜனவரி 3 – 7 ஆம் தேதி வரை – சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

இதற்கான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நடப்பு சாம்பியனான இந்தியா, கடைசியாக நடைபெற்ற 3 தொடர்களையும் கைப்பற்றி, ஹாட்-ட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, 2018-19 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களில், ஆஸ்திரேலிய மண்ணிலேயே 2-1 மற்றும் 2-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

இதனால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்தே காணப்படுகிறது.

இந்திய ஆடவர் அணி மட்டுமின்றில், 2024 டிசம்பர் மாதத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெளியாடுவதற்காக இந்திய மகளிர் அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

பெண்களுக்கான டெஸ்ட் தொடர் டிசம்பர் 5 அன்று தொடங்குகிறது.

முதல் ஒருநாள் – டிசம்பர் 5 – ஆலன் பார்டர் மைதானம், பிரிஸ்பேன்
2வது ஒருநாள் – டிசம்பர் 8 – ஆலன் பார்டர் மைதானம், பிரிஸ்பேன்
3வது ஒருநாள் – டிசம்பர் 11 – WACA மைதானம், பெர்த்

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பம்பரம் சின்னம் ஒதுக்க மறுப்பு: துரை வைகோ ரியாக்‌ஷன்!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *