தோனி, விராட், ரோகித்துடன் சாதனை பட்டியலில் இணைத்த சஞ்சு சாம்சன்

2024 டி20 உலககோப்பைக்கு பின், ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

சுப்மன் கில் தலைமையில் இந்த தொடரில் களமிறங்கிய இந்திய அணி, 4-1 என இந்த தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரில் கடைசி 3 போட்டிகளில் விளையாட இந்திய அணியில் இணைந்த சஞ்சு சாம்சன், 2 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1 அரைசதம் உட்பட 70 ரன்களை சேர்த்திருந்தார்.

கடைசி டி20 போட்டியில் துவக்கத்தில் இந்திய அணி தடுமாறியபோது, பொறுப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 4 சிக்ஸ்களுடன் 58 ரன்களை சேர்த்திருந்தார். அதில் 110மீ தொலைவிற்கு ஒரு இமாலய சிக்ஸரையும் சஞ்சு சாம்சன் விளாசியிருந்தார்.

Sanju Samson Joins In Elite List

இதன்மூலம், டி20 போட்டிகளில் 300 சிக்ஸ்களை பூர்த்தி செய்த சஞ்சு சாம்சன், இந்த இலக்கை எட்டும் 7வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை 276 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 302 சிக்ஸ்களை குவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ்கள் விளாசிய இந்திய வீரர்கள்

1) ரோகித் சர்மா – 525
2) விராட் கோலி – 416
3) எம்.எஸ்.தோனி – 338
4) சுரேஷ் ரெய்னா – 325
5) சூர்யகுமார் யாதவ் – 322
6) கே.எல்.ராகுல் – 311
7) சஞ்சு சாம்சன் – 302

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 1056 சிக்ஸ்களை விளாசி கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்டு (861 சிக்ஸ்கள்) 2வது இடத்திலும், ரசல் (694 சிக்ஸ்கள்) 3வது இடத்திலும் உள்ளனர்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: Despicable Me 4!

‘மினிக்கி மினிக்கி’ : கவனம் ஈர்க்கும் தங்கலான் பாடல்!

நேரடி ஒளிபரப்பு… ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா முக்கிய தகவல்!

பியூட்டி டிப்ஸ்: இளநரையைப் போக்க உதவும் பாட்டி வைத்தியம்!

நிராகரிக்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இந்த மாதம் முதல் ரூ.1,000 !

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts