டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்திய அணிக்கு சிக்கல்!

விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் பிரிவில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதால், இந்திய அணியின் அரையிறுதி கனவுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகள் அரையிறுதிக்காக தீவிர மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், சிட்னி மைதானத்தில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானின் தொடக்க பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில் முகமது ஹரிஸ் (28 ரன்கள்), ஷதாப் கான் ஆகியோர் தென்னாப்பிரிக்காவை திணறடித்தனர்.

t20 worldcup india semifinal match problem

அவர், 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. ஷதாப் கான் 22 பந்துகளில் 52 ரன்களும், அகமது 35 பந்துகளில் 51 ரன்களும், நவாஸ் 22 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நார்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க பேட்டர்களும் பாகிஸ்தான் வீரர்களைப் போன்றே நடையைக் கட்டினர். மறுமுனையில் கேப்டன் பவுமா பொறுப்புணர்ந்து விளையாடினார். ஆனால் அவரின் விக்கெட்டையும், மார்க்ரமின் விக்கெட்டையும் அடுத்தடுத்து ஷதாப் கான் எடுத்தார்.

இந்த சூழலில் தென்னாப்பிரிக்க அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 14 ஓவர்களில் 142 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

t20 worldcup india semifinal match problem

ஏற்கெனவே 9 ஓவர்கள் முடிந்த நிலையில் மேலும் 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

ஆனால் மழைக்குப் பிறகு களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்களை பாகிஸ்தான் பவுலர்கள் வெளியேற்றினர். இதனால் 14 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தானின் இந்த வெற்றியினால், இந்திய அணியின் அரையிறுதி கனவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது.

மேலும், அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி, அரையிறுதிக்குச் செல்வதற்கு கட்டாயம் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியே ஆகவேண்டும். ஒருவேளை இந்தியா தோல்வியுற்றால், பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

t20 worldcup india semifinal match problem

பாகிஸ்தான் அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

அதுபோல், தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணி அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு காத்திருக்கிறது.

அதேநேரத்தில் இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும். ஆகையால் அடுத்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் அல்லது மழை காரணமாக ஒரு புள்ளியாவது பெற வேண்டும். வங்க தேச ஆட்டத்தின்போது வருண பகவான் வழிகாட்டியதுபோல் ஜிம்பாப்வே ஆட்டத்திலும் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

ஜெ.பிரகாஷ்

நடராஜர் கோயில் விவகாரம்: பதில் கடிதம் அனுப்பிய தீட்சிதர்கள்!

பாகிஸ்தானா, துப்பாக்கிஸ்தானா? இம்ரான் கான் மீது தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *