T20 WorldCup : டாஸ் வென்றது பாகிஸ்தான்.. இந்திய அணி பேட்டிங்!

விளையாட்டு

INDvsPAK : மழையின் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 9) இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது.

அதாவது போட்டி நடைபெறும் அமெரிக்காவின் நியூயார்க்கில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது.

India-Pakistan Match Start Delayed due to rain

உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி நடைபெறும் நிலையில், அங்கு 10 மணி முதல் 12 மணி வரை 45 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 மணி முதல் 2 மணி வரை 20 முதல் 35 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிட்டபடி 40 ஓவர்களும் முழுமையாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சதில் சில ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்த வாய்ப்பு உள்ளது.

எனினும் இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மைதானத்தை விட்டு கலையாமல் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து தற்போது மழை நின்றதை அடுத்து மைதானத்தில் இருந்து கவர் அகற்றப்பட்டு டாஸ் போடப்பட்டது. அதில் பாகிஸ்தான் அணி கேப்டன் டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”நரேந்திர தாமோதரதாஸ் மோதி என்னும் நான்” : ஹாட்ரிக் அடித்த மோடி

அமைச்சர் பதவிக்கு ’நோ’ சொல்லிவிட்டு, பதவியேற்பு விழாவில் அஜித் பவார் பங்கேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0