டி20: இங்கிலாந்தின் இளம் புயல் சாம் கரன் வென்ற இரு பட்டங்கள்!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தனது அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் கரன் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் பட்டங்களைத் தட்டி சென்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றப் போவது யாராக இருக்கும் என்ற அனைவரது எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய இறுதிப்போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதில் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் பாபர் அசாம், மசூத் மற்றும் நவாஷ் என 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ்கின் பொறுப்பான அரைசதத்துடன் 19 ஓவரிலேயே அதன் வெற்றி இலக்கை அடைந்து 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், நடப்பு உலகக்கோப்பை மற்றும் இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக சாம் கரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24 வயதே ஆன சாம்கரன் தனது வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து கோப்பையை கையில் ஏந்த பெரும் பங்கு வகித்துள்ளார்.
இந்த தொடரில் இறுதிப்போட்டி உட்பட 6 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்கரன் மொத்தம் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
வீடுகளில் புகுந்த வெள்ளம்: இறங்கி வேலை செய்யும் மேயர்
டி20: உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து